← முகப்பு பதிவு

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை

🕐 4 நாள்கள் முன்னர் 📂 பதிவு 20 பார்வைகள்
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை
சாவகச்சேரி நீதிமன்றில் சுமந்திரன் தொடுத்த வழக்கு நிராகரிப்பு

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் பிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை கூட்டி, நீதிமன்றை அவமதிக்கும் விதத்தில் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் , அது நீதிமன்ற அவமதிப்பு என குறிப்பிட்டு , அது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அது தொடர்பில் கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்த தீர்மானத்தையும் நேற்று அறிவிப்பதாக நீதிமன்றம் திகயிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரான பௌத்த பிக்கு பிணை நிபந்தனைகளை இதுவரை மீறவில்லை என்றும் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் இந்த வழக்கை பொறுத்தவரை மூன்றாவது நபர் என்றும் குறித்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரரின் கூற்றுக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தொடுப்பதற்கான தேவைப்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிய மனுவை நிராகரித்து கட்டளையாக்கினார்.

இந்நிலையில் குறித்த கட்டளைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net