← முகப்பு பதிவு

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 102 பார்வைகள்
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா
சுமந்திரனின் தவறான ஆட்சேபனை – வழக்கு செலவாக 10ஆயிரம் செலுத்த உத்தரவு

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பதில் செயலாளர் எம், ஏ சுமந்திரன் ஆகியோருக்கும் யாழ் . மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

குறித்த கட்டளைக்கு எதிராக தான் மேன்முறையீடு செய்யவுள்ளதாக எம்,ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் என்பவரை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்துவதாக உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை குறித்த உறுப்பினர் சவாலுக்கு உட்படுத்தி, சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்ற மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது மன்றில் தோன்றிய தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வீ கே சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமிழரசுக் கட்சியின் தலைவராலும் செயலாளராலும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் தவறானது எனக் கூறி தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தலா பத்தாயிரம் ரூபாயை குறித்த ஆட்சேபனையை எழுப்பியதற்கான வழக்குச் செலவாக செலுத்த வேண்டுமென கட்டளையிட்டுள்ளது.

அதனை அடுத்து வழக்கினை ஜூலை மாதம் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

குறித்த கட்டளை தொடர்பில் எம்.ஏ சுமந்திரனிடம் ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது , குறித்த கட்டளைக்கு எதிராக மேன் முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net