← முகப்பு செய்திகள்

நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசா

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசா
நாகரிகமான பிரஜைகளை உருவாக்க பாடசாலை அனுபவம் அவசியம் – பிரதமர் ஹரிணி

நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் கல்வியை உறுதிப்படுத்தி இருக்கின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 மே 15ஆம் திகதி சவ்சிரிபாய வளாகத்தில் நடைபெற்ற, டவர் ஹோல் திரையரங்கு அறக்கட்டளையினால் 30 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட “2024/2025 அகில இலங்கை பாடசாலைகள் நாடகப் போட்டித்தொடரின்” விருது வழங்கும் விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

பாடசாலை மாணவர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் அவர்களது வாழ்க்கைக்கு மட்டுமன்றி, நாட்டிற்குத் தேவையான உயரிய மனப்பாங்கைக் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதிலும் பெரிதும் துணையாக அமைகின்றன.

எனினும், தற்காலத்தில் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியைத் துரிதமாக முடித்துவிட்டு, அவர்களை அவசர அவசரமாக வளர்ந்தவர்களாக்குவதற்கு முற்படும் போக்கினைப் பெரியவர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கின்றது. இது நாட்டிற்குத் தேவையான வளர்ச்சி பெற்ற பிரஜைகளை உருவாக்குவதற்குப் பொருத்தமானதொரு சூழல் அல்ல.

‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் மூலம் நாட்டில் பல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளதால், அவற்றைச் சட்டத்தினால் மாத்திரம் தீர்த்துவிட முடியாது. அதற்குச் சமூகத்தில் தெளிவானதொரு மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்த மனிதனை உருவாக்குவதற்குக் கலைத்துறையினால் மகத்தான பணியை ஆற்ற முடியும். சமூகத்திற்குத் தேவையான சிறந்த கற்பனைத்திறன், கருணை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட படைப்பாற்றல் மிக்க, முழுமையான நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் கல்விச் செயன்முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net