← முகப்பு தலையங்கம்

நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமை

🕐 17 Mar 2026 📂 தலையங்கம் 70 பார்வைகள்
நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமை

நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தி முகாமைத்துவத்தை பேணி நாட்டின் பொருளாதார செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் பொருளாதார செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களை எதிர்கொள்வதற்காக நாளை (17) முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை நடைமுறை பொருந்தாது என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் நான்கு பிரதான குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான ந
04 Jun 2026
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
04 Jun 2026
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
முக்கிய செய்திகள்
1
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்
2
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
3
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர
தமிழ் · 04 Jun 2026
4
மின்வாரிய தலைமையகத்தில் அதிர்ச்சி; ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய
5
3 நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகி வந்
6
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம்
தமிழ் · 04 Jun 2026
7
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net