← முகப்பு பதிவு

நாட்டிற்கு சுற்றுலா விசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 90 பார்வைகள்
நாட்டிற்கு சுற்றுலா விசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களை
வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடங்களை வாடகைக்கு வழங்குவோருக்கு எச்சரிக்கை

நாட்டிற்கு சுற்றுலா விசா மூலம் வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வீடுகள், விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கும் உரிமையாளர்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறுகிய கால அல்லது நீண்ட கால அடிப்படையில் வாடகைக்கு பெறப்படும் இடங்களைப் பயன்படுத்தி, பல்வேறு மோசடிச் செயல்கள் மற்றும் குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் (2025) மற்றும் இவ்வருடத்தின் (2026) இதுவரையான காலப்பகுதியில், குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறி தங்கியிருந்த பெருமளவான வெளிநாட்டவர்கள் இவ்வாறான தங்குமிடங்களிலேயே வைத்து கணினி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இவ்வாறான இடங்களை மறைவிடங்களாகப் பயன்படுத்துவதால், கட்டட உரிமையாளர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகிறது.

ஆகையால் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது பிரிவின் கீழ், ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் விபரங்களைத் திரட்டும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு என்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ளவது அவசியம்.

இதன்படி, வீட்டு உரிமையாளர்கள் அல்லது பிரதான குடியிருப்பாளர்கள், தமது வீட்டில் தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்கள், வேலையாட்கள் மற்றும் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் (வாடகைக்கு இருப்போர்) குறித்த விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

குடியிருப்பாளர்களில் மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். இதனைத் தவறவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமது இடங்களை வாடகைக்கு வழங்கும் போது, அதனைப் பெறுபவர்களின் விபரங்கள் மற்றும் தேவையினை உறுதிப்படுத்துவதன் மூலம் உரிமையாளர்களும் தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்து தகவல்கள் தெரிந்திருப்பின் 119, 118 ஆகிய பொலிஸாரின் துரித தொலைபேசி இலக்கதை தொடர்புக் கொண்டோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net