← முகப்பு செய்திகள்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் மே 29ம் தேதி அமேசான்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் மே 29ம் தேதி அமேசான்
“லீடர்” படம் மே 29ம் தேதி அமேசான் பிரைம் இணைய தளத்தில் வெளியாகிறது

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் மே 29ம் தேதி அமேசான் பிரைம் இணைய தளத்தில் வெளியாகவுள்ளது. 2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என ‘லீடர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘லீடர்’ திரைப்படம் மே 29ம் தேதி அமேசான் பிரைம் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net