← முகப்பு செய்திகள்

திமுக உடன் கூட்டணி வைத்து முதல்வராக எடப்பாடி முயற்சி செய்தார். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
திமுக உடன் கூட்டணி வைத்து முதல்வராக எடப்பாடி முயற்சி செய்தார். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை
சிவி சண்முகம் போட்டு உடைத்த சீக்ரெட்

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்துள்ளோம். கட்சியை காப்பற்றப்படவேண்டும் என்பதில் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். அதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தவெகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.

தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறோம். அனைவரும் பொறுப்பாக ஏற்கிறோம். அதனை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.கட்சியை அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும். பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும். பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி விரைவில் கூட்டுவார் என நம்புகிறோம்.

பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். தவெகவை ஆதரிக்க அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி வேலுமணி தேர்வு, கொறடாவாக சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்து உள்ளோம். தவெகவை ஆதரிப்பது என்பது அதிமுக பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு.

அதிமுகவை உடைக்க வேண்டிய எண்ணம், நோக்கம் எங்களுக்கு இல்லை. அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை; தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net