← முகப்பு செய்திகள்

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் சரக்கு ரெயில் செல்லும் வழியில் மதியம் பேருந்து குறுக்கே சென்றபோது

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் சரக்கு ரெயில் செல்லும் வழியில் மதியம் பேருந்து குறுக்கே சென்றபோது
தாய்லாந்து: சரக்கு ரெயில்-பேருந்து மோதல் – 8 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் சரக்கு ரெயில் செல்லும் வழியில் மதியம் பேருந்து குறுக்கே சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தை சிறிது தூரத்திற்கு ரெயில் இழுத்து சென்றது. இதன் தொடர்ச்சியாக வேறு சில வாகனங்களின் மீதும் அந்த ரெயில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில், அந்த வாகனங்களில் உள்ளவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அவசரகால பணியாளர்கள் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். எனினும், ரெயில் மோதிய வேகத்தில் அந்த பேருந்து, தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால், பயணிகளை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. முதலில் தீயை அணைக்கும் பணி நடந்தது. இதன்பின்னர், பேருந்தில் சிக்கிய பணிகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், விபத்து மற்றும் தீயில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர் என தெரிய வந்தது. 20 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதனை சீர் செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net