← முகப்பு செய்திகள்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் மக்கள் பவனுக்கு வருகை தந்து, அங்கு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் மக்கள் பவனுக்கு வருகை தந்து, அங்கு
ஆளுநருடன் முதல்வர் விஜய் முதன்மை செயலர் சந்திப்பு

மே 4ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்து 6 நாள்களாகியும் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. துறை ஒதுக்காத காரணத்தால் நிறைய கோப்புக்கள் அமைச்சர்கள் கையெழுத்திடாமல் உள்ளது.

இன்னும் 2 தினங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளம் சென்றிருந்த ஆளுநர் அர்லேகர் இன்று காலை சென்னை திரும்பியுள்ளார். அழரை முதல்வர் விஜயின் முதன்மை செயலர் செந்தில் சந்தித்துள்ளார். தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கேரளம் சென்றிருந்த நிலையில், நேற்று மாலை அவர் சென்னை திரும்பியிருந்தார்.அவரிடம், அமைச்சர்களுக்கான துறைகள் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான தகவல்களும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று மாலை கேரளம் செல்லும் ஆளுநர், திங்கட்கிழமை அம்மாநில முதல்வர் பதவியேற்பை நடத்தி வைக்க உள்ளார். அதன் பின்னர் ஆளுநர் அர்லேகர் சென்னை திரும்ப உள்ளார். அதன் பிறகே அமைச்சர் விரிவாக்க பதவியேற்பு நடைபெறும் என தெரிகிறது. அதற்கு முன்பாக 9 அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net