← முகப்பு செய்திகள்

தமிழக சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜே.சி.டி.பிரபாக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 50 பார்வைகள்
தமிழக சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜே.சி.டி.பிரபாக
சபாநாயகர் தேர்வு

சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், செங்கோட்டையனும் இணைந்து ஜே.சி.டி.பிரபாகரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில்: திமுக கூட்டணிக்கு 1.54 கோடி வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். பெரும்பான்மையை மக்கள் ஆளும் கட்சிக்கு வழங்காமல் போனாலும், திமுக தோழமை கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதற்கு வாழ்த்துகள். பணிகள் சிறக்கப்பட்டும். வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, மக்களை பிரிக்கும் சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும்

தமிழ்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. நீண்ட வருடங்களுக்கு பின் நிறைய பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளீர்கள். வாழ்த்துகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த சட்டசபை இந்த தமிழ்நாடு சட்டசபை. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும் போதும் அனைவரும் ஒரே வரிசையில் நின்று செயல்படுவோம். அதை தான் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த புதிய அரசு உங்களுக்கு வாக்களித்தாக மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். முதலமைச்சரும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். என்றார்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

விசிக சட்டமன்ற தலைவர் வன்னி அரசு பேசுகையில்: இன்று காலை முதலமைச்சர் விஜய் அறிவித்த 717 மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற அறிவிப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.சட்டசபையில் ஒலிக்கும் விசிகவின் குரல் தமிழ்நாட்டு சிறுபான்மை மக்களின் குரல்.மத்திய பாஜக அரசுக்கு எதிரான அரசியலை அவைத்தலைவர் முன்னெடுக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் குரல் வலிமை பெற வேண்டும் என அம்பேத்கார் கூறினார். எதிர்க்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும். ஆளுங்கட்சியின் குரலை விட எதிர்க்கட்சிகளின் குரல் சட்டசபையில் வலிமை பெற வேண்டும் என்று கூறினார்.

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் பேசியதாவது:- அரசியல் சூழல் காரணமாக சில கசப்பான விஷயங்கள் நடந்தன. தமிழக இளைஞர்கள், நாங்களும் உங்களை நம்புகிறோம்.* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் தொடர வேண்டும், இளைஞர்கள் அதிகளவில் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர். முதலமைச்சர் கையெழுத்திட்ட 3 திட்டங்களும் வரவேற்கத்தக்கது. த.வெ.க. தலைமையிலான அரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net