← முகப்பு செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகம், நடமாட்டத்தை கண்காணிக்க சீக்ரெட் குழுவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 40 பார்வைகள்
தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகம், நடமாட்டத்தை கண்காணிக்க சீக்ரெட் குழுவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க”சீக்ரெட் குழு”

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால் சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்விக்கு போதைப்பொருள் நடமாட்டமே முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற உடன் 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி கள்ளசந்தையில் மதுவிற்பனை முற்றிலுமாக தடுக்க கடும் நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வண்ணம் தவெக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் விநியோகத்தை கண்டறிய தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் கொண்ட சீக்ரெட் குழுக்களை அமைக்க வேண்டும்; டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும்; டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் பணி நேர கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என துணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net