← முகப்பு தலையங்கம்

தன்னுடைய கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபட தான் தயாராக இருந்ததாகவும், அழைப

🕐 23 Feb 2026 📂 தலையங்கம் 74 பார்வைகள்
தன்னுடைய கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபட தான் தயாராக இருந்ததாகவும், அழைப

தன்னுடைய கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபட தான் தயாராக இருந்ததாகவும், அழைப்பை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த பல்கலைக்கழக உரையாடல் நிகழ்வுகள், தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கங்கள் சுதந்திரமான விவாதங்களுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் பெயர்பெற்றவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபட தான் தயாராக இருந்ததாகவும், அழைப்பை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் அழுத்தம் காரணமாக ஏற்பாட்டுக் குழுவினர் இந்த நிகழ்வுகளை ரத்து செய்ய நேரிட்டது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிரட்டல்கள் மூலம் ஒருவரது குரலை ஒடுக்குவதை விட, ஆரோக்கியமான விவாதங்களின் மூலமே உண்மையான ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை அழைத்தமைக்காக இரு சங்கங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் இத்தகைய சவாலான சூழல்கள் இல்லாத ஒரு தளத்தில் உரையாடல்களைத் தொடர வாய்ப்புக் கிடைக்கும் என நம்புவதாகவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அந்த நள்ளிரவு நேரம், இங்கிலாந்தின் டெவன் (Devon) கவுண்டியில் உள்ள சௌர்டன் டவுன் (Sourton Down)
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net