← முகப்பு செய்திகள்

ஜனாதிபதி செயலாளரை மாற்றுவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
ஜனாதிபதி செயலாளரை மாற்றுவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்
ஜனாதிபதி செயலாளர் மாற்றமா?

ஜனாதிபதி செயலாளரை மாற்றுவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஒரு சிறிய குழுவினரால் இவ்வாறான பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் அத்தகைய எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றும் மஹிந்த சமரசிங்கவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது குறித்தும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net