← முகப்பு செய்திகள்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
Gold Rate

தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று வாரத் தொடக்கத்தில் உயர்ந்திருந்த நிலையில் இன்று (மே 26) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.

சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,240-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் சரிவைச் சந்தித்து நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.400 சரிந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் இன்று வெள்ளி விலை கடந்த சில நாட்களாக நீடிக்கும் அதே விலையிலேயே தொடர்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை மாற்றமின்றி இன்றும் ரூ.2,95,000-க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net