பாதசாரி, பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞர் பலி!
குருணாகல் – பன்சியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்துபடகம பகுதியில் நேற்று (14) வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மடகல்ல – இப்பாகமுவ வீதியின் தம்புவ சந்தியிலிருந்து பொன்னிலவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் சென்ற பாதசாரி மீது மோதி பின்னர், எதிரே வந்த பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பொல்பெத்தியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மகுல்பொத்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்சியகம போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.