Homeசெய்திகள்

களுத்துறையில் 23 விமான குண்டுகள் மீட்பு

விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.களுத்துறை சென்ட்ரல் சந்தி, பரா

ஜப்பான் தேர்தல்: தகைச்சி பெரும்பாண்மை பெறுவார்: கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!
வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்
அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா
யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது


விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றில் அத்திவாரம் வெட்டும் பணியின் போதே இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியின் மண்வெட்டியில் சிக்கி 3 மோட்டார் குண்டுகள் முதலில் மீட்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், அங்கு மேலும் குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சேற்று நீரினால் நிறைந்திருந்த குழிகளை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டனர். இதன்போது மேலும் 20 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட குண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை கட்டுக்குருந்த விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.