← முகப்பு செய்திகள்

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 38 பார்வைகள்
கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை
பட்டிருப்பு பாலத்தருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர்.

இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுமியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு பாலத்தருக்கில் இன்று (15) வெள்ளிக்கிழமைமுள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net