← முகப்பு பதிவு

ஓபிண் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன்,

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 15 பார்வைகள்
ஓபிண் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன்,
ஓபிண் ஏஐ கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் எலான் மக்ஸ் ஆர்வம் காட்டினார் – சாம் ஆல்ட்மேன்

ஓபிண் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், உலகின் மிகப் பெரிய பணக்கார தொழில்நுட்பஅதிபர்கள் சிலரை ஒருவருக்கொருவர் எதிராக மோதவிடும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் சாட்சி கூண்டில் ஏறியுள்ளார்.

நேற்று செவ்வாயன்று சாட்சியமளித்த ஆல்ட்மேன், பொது நலனுக்காகப் பணியாற்றுவதே நிறுவனத்தின் ஸ்தாபக நோக்கம் என்ற எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்தான், அந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டினார் என்று ஆல்ட்மேன் கூறினார்.

ChatGPT- ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம், மஸ்க் மற்றும் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல தொழில்முனைவோர்களால் 2015-ல் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக நிறுவப்பட்டது. அது 2019-ல் ஒரு இலாப நோக்கு துணை நிறுவனத்தை நிறுவியது.

கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் உரிமையியல் வழக்கில், ஆல்ட்மேன், ஓப்பன்ஏஐ தலைவர் கிரெக் ப்ராக்மேன் மற்றும் அந்த நிறுவனமே, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் அதன் அசல் நோக்கத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு இலாப நோக்கு நிறுவனமாக மாறிவிட்டதாக மஸ்க் குற்றம் சாட்டுகிறார்.

தற்போது xAI மற்றும் அதன் க்ரோக் சாட்பாட் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் கால் பதித்துள்ள மஸ்க், அற்பமான பழிவாங்கும் நோக்கத்தால் உந்தப்படுகிறார் என்று OpenAI வாதிடுகிறது.

OpenAI இன் வர்த்தகப் பிரிவின் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்த பின்னரே மஸ்க் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net