← முகப்பு செய்திகள்

ஒருசில பிக்குகளின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பிக்குகளையும் குற்றஞ்சாட்ட கூடாது.சட்டவிரோத மற்றும்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 38 பார்வைகள்
ஒருசில பிக்குகளின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பிக்குகளையும் குற்றஞ்சாட்ட கூடாது.சட்டவிரோத மற்றும்
பிக்குகளுக்கு மாத்திரம் சட்டத்தில் விசேட சலுகை வழங்க கூடாது – ஓமல்பே சோபித தேரர்

ஒருசில பிக்குகளின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பிக்குகளையும் குற்றஞ்சாட்ட கூடாது.சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற வகையில் செயற்படும் பிக்குகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு அவர்களை துறவறத்தில் இருந்து நீக்க வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பௌத்த பிக்குகள் தொடர்பில் அண்மைகாலமாக வெளியாகும் செய்திகள் கடும் அதிருப்திக்குரியன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்செயல்களில் பௌத்த தேரர்கள் தொடர்புப்பட்டுள்ளமை பௌத்த மக்கள் மத்தியில் விரக்தி நிலைமையை உருவாக்கியுள்ளது.

ஒருசில தேரர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளுக்காக ஒட்டுமொத்த பௌத்த தேரர்களையும் குற்றஞ்சாட்ட முடியாது. பௌத்த தேரர்களுக்கு மனித உரிமைகள் என்பது கிடையாது. துறவறத்தை ஏற்கும் போது அவர்கள் தமக்கான மனித உரிமைகள் மற்றும் ஆசைகளை துறக்க வேண்டும்.

பௌத்த தேரர்கள் ஒழுக்காற்று கொள்கை, பொதுச்சட்டம்,பாரம்பரிய கோட்பாடுகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட வேண்டும். சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேரர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

தேரர்கள் என்பதால் சட்டத்தில் அவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்க முடியாது. அனைவரும் நாட்டின் பொதுச்சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net