← முகப்பு பதிவு

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது

🕐 19 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு , நடைபெற்ற இசை நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞனான இளைஞன் பக்தி பாடல்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு , ஏற்கனவே தனது இசை சேர்க்கையில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து , அதனை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து , தென்னிலங்கையில் பலரும் கடுமையான விமர்சனங்களையும் , இனவாத கருத்துக்களையும் முன் வைத்தனர்.

இந்நிலையில் , குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் , பாடலை பாடிய கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இளைஞனை பொலிஸார் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போது ஆலய திருவிழாக்கள் பல இடங்களிலும் நடைபெற்று வரும் நிலையில் , திருவிழாக்களில் நடைபெறும் மேள கச்சேரி மற்றும் இசை நிகழ்வுகளில் தாயக எழுச்சி பாடல்கள் இசைக்கப்படுவது மற்றும் பாடப்படுவது தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதனால் , அவை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உரும்பிராய் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற இசை நிகழ்வில் தாயக பாடல்களை பாடிய குற்றச்சாட்டில் தாயகத்தின் புகழ் பூத்த பாடகரான மறைந்த பாடகர் எஸ்.ஜி சாந்தனின் மகனான கோகுலன் உள்ளிட்ட இருவரை கோப்பாய் பொலிஸார் விசாரணைக்கு அழைத்து கடுமையான விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் விடுவித்திருந்தார்.

யுத்தம் நடைபெற்ற கால பகுதியில் தாயகத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் , விடுதலைப்புலிகளின் பாடல்கள் அல்ல. அக்கால பகுதியிலும் காதல் பாடல்கள் , பக்தி பாடல்கள் , யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் வலிகளை கூறும் பல பாடல்கள் வெளிவந்தன. அவற்றினையே படுகிறோம். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பாடல்களை நாம் பாடவில்லை என பாடகர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
4 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
4 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
4 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
5 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
7 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
7 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net