இன்று (09) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து அதிகளவில் கலந்துரையாடி வருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து அமைச்சுகள் சார்பாகவும் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
“இந்த ஹேக்கர்களின் தாக்குதல்கள் எதிர்காலத்திலும் தொடரலாம். இது இந்தத் துறையின் இயல்பு. நாம் உரிய பாதுகாப்பைப் பேணி, அவதானத்துடன் இந்த கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க வேண்டும்” என அமைச்சர் கூறினார்.