← முகப்பு தலையங்கம்

உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

🕐 11 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 10 பார்வைகள்
உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்டத்தின் குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில் 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதற்காக பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உழவு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த இளைஞன் எதிர்பாராத விதமாக அதன் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கனகராயன்குளம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அந்த நள்ளிரவு நேரம், இங்கிலாந்தின் டெவன் (Devon) கவுண்டியில் உள்ள சௌர்டன் டவுன் (Sourton Down)
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net