← முகப்பு பதிவு

ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்தும் முகமாக சட்ட

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 140 பார்வைகள்
ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்தும் முகமாக சட்ட

ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்தும் முகமாக சட்ட சபையின் முதல் அமர்விலையே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் விஜயிடம் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அது தொடர்பில் தமிழக முதல்வருக்கு , நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதற்தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கீழ்வரும் கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுநிற்கின்றோம்.

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை நினைவுகூரும் வகையில், கடந்த 2009 ற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18 ஐ 'முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக” ஈழத்தமிழ் மக்கள் பிரகடனம் செய்து, அந்நாளில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரமாக ஒன்றுகூடி நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்களது மேற்படி நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளதும் ஆதரவுடன் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு என்றும், அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்நேரத்தில் தங்களது கட்சி நிறுவப்பட்டிருக்கவில்லையாயினும், அதன் பின்னர் தமிழக வெற்றிக்கழகம் தோற்றம் பெற்று, அதன் முதலாவது தேர்தலில் பெருவெற்றியீட்டி தாங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளீர்கள்.

இந்நிலையில் தாங்களும் தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்ற அதே நிலைப்பாட்டிலே மிகவும் இறுக்கமாகவும் உறுதியாகவும் பயணிப்பீர்கள் என்ற செய்தியை அனைத்துத் தரப்புகளுக்கும் வழங்கும் வகையில், மேற்படி 2013 ஆம் ஆண்டு சட்டசபைத் தீர்மானத்தையொட்டிய ஓர் தீர்மானத்தை, இம் மே மாதத்தில் கூடும் தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே தங்களது தலைமையில் நிறைவேற்றுவது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்துவதாக அமையும்.

அதன் மூலம், ஈழத் தமிழினம் மீது நீங்கள் காட்டும் அக்கறையானது, கொடிய இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்பதுடன் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் இதயங்களில் நீங்காத இடத்தை தங்களுக்கு வழங்கும் என்பதையும் தெரிவித்து, மீண்டும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
4 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
5 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
6 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
7 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 31 நிமிடங்கள் முன்னர்
2
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
4
Gajakesari Yoga in June 2026 bring luck and prosperity to these 4
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
5
Suryakumar Yadav is all set to Removed As India T20 Captain; New
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net