மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் உயிரிழப்பு
இரத்தினபுரி -பலாங்கொடை வீதியின் பத்கம்கொட சந்திக்கருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயரிழந்துள்ளார்.
பலாங்கொடையிலிருந்து பெல்மடுல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இளைஞன் கஹவத்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.