← முகப்பு செய்திகள்

இன்றைய தினம் காலை, மாலை என இருவேளை தங்கம் சவரனுக்கு ரூ.2280 குறைந்துள்ளது.

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
இன்றைய தினம் காலை, மாலை என இருவேளை தங்கம் சவரனுக்கு ரூ.2280 குறைந்துள்ளது.
ஓரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.2280 குறைவு

நேற்றைய முன்தினம் காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560-ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 30,000-ம் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து, ரூ. 1,20,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 120,400 -க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் காலை சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 800 குறைந்து சவரன் ரூ. 1,19,600 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,950 -க்கு செய்யப்பட்டது. அதே போன்று வெள்ளியின் விலையும் இன்று காலை கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 305 -க்கும், ஒரு கிலோ ரூ. 3,05,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாலையில் தங்கத்தின் விலை ரூ.1480 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.305-க்கும். ஒரு கிலோ வெள்ளி ரூ.3,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net