← முகப்பு செய்திகள்

இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை ய

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை ய
திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும் – சிவஞானம்

இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தும் இது தொடர்பில் எமது கரிசனைகளை வெளிப்படுத்தினோம்.

பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய கட்டடம் நேரடியாக யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்ட வேண்டும்.

ஆனால் அதன் தளங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பாகவும் எவ்வாறு அதனை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் குழுவை உள்ளூர் மட்டத்தில் நியமிக்கலாம். யாழ் மாநகர சபை முழுமையாக செய்வதில் சில சிக்கல்களை இருப்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.

இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தீர்மானித்தபடி யாழ் மாநகர சபையிடம் கட்டிடத்தை கையளிக்க வேண்டும்.

அந்த கட்டிடம் தொடர்பாக கூட்டு முகாமைத்துவ முயற்சிகள் தவிர்க்க வேண்டும் என்பதுடன் அரசாங்கம் எடுத்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

அடுத்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரை சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்தி கலந்துரையாட இருக்கிறோம் – என்றார்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
காக்ரோச் ஜனதா கட்சி ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா?
செய்திகள் · 44 நிமிடங்கள் முன்னர்
4
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள்
தலையங்கம் · 53 நிமிடங்கள் முன்னர்
5
பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்க
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் உள்ள சஹாரா வறுபூமிப் பகுதியில், தா
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
7
அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நீட
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net