← முகப்பு பதிவு

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய ஆளுகையை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 92 பார்வைகள்
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய ஆளுகையை
திருவள்ளுவர் பௌத்த சாசன அமைச்சிடம்?

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய ஆளுகையை இலங்கை பௌத்த சாசன அமைச்சு கைகளில் எடுத்துக்கொண்டுள்ளது.

இதனிடையே மண்டபம் தொடர்பான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற, அமைச்சரவைக் கூட்டத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில், யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தை பராமரித்து முன்னெடுத்து செல்லும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தின் பிரகாரம், கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக ஒருங்கிணைந்த முகாமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும் திட்ட நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக யாழ். மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மத்திய நிலையத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றை உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புறுதி வரைவு ஆவணத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக யாழ்.மாநகரசபை மண்டபத்தை பராமரிக்க ஆளணி மற்றும் நிதி கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதும் இந்திய அரசு எத்தகைய ஒதுக்கீடுகளையும் வழங்கியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
5 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net