← முகப்பு செய்திகள்

ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும் வரை எந்த படத்திலும் நான் நடிக்க மாட்டேன். என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 44 பார்வைகள்
ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும் வரை எந்த படத்திலும் நான் நடிக்க மாட்டேன். என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்
நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், "சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் அப்பாவும் என் அண்ணனும் நான்கு வருடங்கள் வேலை செய்யவில்லை. இளம் வயதில் என் குடும்பத்திற்காக உழைத்தேன். என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை"

"என்னுடைய கடந்த வாழ்க்கையில் 14 வருடம் வாழ்ந்துள்ளேன். ஃபெமினிசம் என்றால் என்ன தெரியாதா? என் படங்களில் பெண்ணின் உரிமையை பற்றி பேசுகிறேன். நான் தப்பாக பெண்களை பேசுவேனா? என் தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. என்னுடைய பிள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன். அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால் இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை.

பள்ளிக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன். நான் எப்படி சூட்டிங் வர்றானு பார்க்கிறான் என சொல்கிறார்கள். அவர்களே தயாரிப்பாளராக்கியதே நான் தான். வீட்டைவிட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான். இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். என் தாய் Cyber புல்லிங் என்று நிற்கிறதோ? ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார்.

இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பிவிட்டார்கள். நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி செல்ல முடியும். என் பசங்களுக்காக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அப்பா அம்மா அந்த பெண் வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை. என்னை அடிமையாக வைத்திருந்தார்கள். கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்" என ஆக்ரோஷமாக, கண்ணீர் மல்க ரவிமோகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 28 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net