ஆரம்பத்தில் இருந்தே தவெக (TVK) கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர் யூடியூபர் மாரிதாஸ் என்பது ஊர் அறிந்த உண்மை. தேர்தலுக்கு முன்னரே தவெக தொடர்பாகவும், அதன் தலைவர் விஜய் தொடர்பாகவும் மாரிதாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், அடுக்கடுக்கான அவதூறுகளையும் பரப்பி வந்தார். ஆனால், இம்முறை அவர் எல்லை தாண்டிப் படுமட்டமான நிலைக்குச் சென்றுவிட்டார். ஒரு பெண் அமைச்சரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதோடு நின்றிருந்தால் பரவாயில்லை; ஆனால், மாரிதாஸ் அதையும் தாண்டி அமைச்சர் கீர்த்தனாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக எவ்வித ஆதாரமும் அற்ற அசிங்கமான மற்றும் ஆபாசமான கருத்துகளைத் தனது வீடியோவில் வெளியிட்டு வன்மத்தைக் கக்கியுள்ளார். விஜய் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டு வரும் நிலையில், ஒரு பெண் அமைச்சரையே இப்படிப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தியதை இந்த அரசு சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் அமைச்சர் கீர்த்தனாவைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதற்காகவே சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸை நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்துள்ளார்கள் என்று காவல்துறை தரப்பில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சீமான், திமுக போடும் எலும்புத் துண்டுக்காகத் தற்போது நக்கிப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் அப்படியே உண்மைக் கதையைத் திரித்து, ஆதவ் அர்ஜுனாவின் குடும்ப ஊழலை மாரிதாஸ் அம்பலப்படுத்தியதால் தான் கைது செய்யப்பட்டார் என்று புதுக் கதையைக் கிளப்பி விட்டு மக்களைக் குழப்பப் பார்க்கிறார். இதேவேளை, தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்கு எதற்குமே வாய் திறக்காத பாஜக (BJP) கட்சி, இந்த மாரிதாஸின் கைதுக்கு மட்டும் பெரும் கண்டனம் வெளியிட்டு மல்லுக்கட்டுவதுதான் பரபரப்பின் மற்றும் சந்தேகத்தின் உச்சமாக இருக்கிறது.
யார் தயவில் நின்றுகொண்டு மாரிதாஸ் இப்படி ஒரு பெண் அமைச்சரையே இழிவாகவும் கொச்சையாகவும் பேசுகிறார் என்பது இதுநாள் வரை புரியாமல் இருந்தது. ஆனால், தற்போது பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் இந்த காவாலிக்காக வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்து வாங்க வருவதைப் பார்த்தாலே, மாரிதாஸ் யாருடைய கைக்கூலியாகப் பின்னணியில் நின்று ஆடுகிறார் என்பது அப்பட்டமாகப் புரிகிறது. பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் இப்படி அவதூறு பரப்பும் இழிவான அரசியல் புத்தியை விஜய் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே பெண்களை இழிவாகப் பேசிய திருச்சி சிவா சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதே பாணியில் பெண்களை அவமதித்துப் பேசிய முக்தர் என்பவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அந்த வரிசையில் இது 3வது அதிரடிக் கைதாகும். பெண்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசும் இது போன்ற ஈனப்பிறவிகளைச் சிறையில் அடைத்துச் சவுக்கடி கொடுக்க வேண்டும் என்று விஜய் அரசு எடுத்திருக்கும் இந்த அதிரடி முடிவு, ஒரு நல்ல முன் உதாரணம். இனியாவது பெண்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் இந்த வக்கிரக் கூட்டம் திருந்துகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!