← முகப்பு செய்திகள்

அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புச

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புச
அரசியலமைப்பின் பொறுப்பை நிதி பற்றிய குழு மீறியுள்ளமை வெட்ககேடானது – சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்

அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புசார் பொறுப்புக்களை கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல்’ அதிகாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் வெட்கக்கேடான முறையில் மீறப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தின் உண்மையான குற்றவாளியை மறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றியக் குழு உத்தியோகபூர்வ முத்திரையை வழங்கியுள்ளமை கவலைக்குரியது என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

2.5 மில்லியன் டொலர் மோசடி தொர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த வெள்ளிக்கிழமை (8) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திறைசேரி மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை ஊடாக, இலங்கை மத்திய வங்கி,திறைசேரி தமது தவறை மூடி மறைத்துக் கொள்வதற்கு ஒருமாத காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கீழ்நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உயிரற்ற கணினி கட்டமைப்பு மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்னெடுக்கும் முயற்சியை அவதானிக்க முடிகிறது.அறிக்கையில் விடயங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மலினப்படுத்தியுள்ளது.

08 பக்கங்களைக் கொண்டதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 பிரகாரம் அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்பு தொடர்பில் எவ்வித நியாயமான கண்காணிப்புக்கள்,பரிந்துரைகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை.

இலங்கை திறைசேரி வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற இந்த நிதி மோசடி தொடர்பான குழு அறிக்கையில்,மோசடி எவ்வாறு இடம்பெற்றது? அதை தடுத்திருக்க முடியுமா? இந்த குற்றத்துக்கு யார் பொறுப்புக்கு கூறுவது? தொடர்பில் குழு அறிக்கையிடவில்லை.திறைசேரி விடுவிப்புக்காக குறிப்பிட்ட காரணமே அறிக்கையில் முழுமையாகவுள்ளது.

இந்த மோசடி இடம்பெறும் சந்தர்ப்பத்தில் 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கடன் முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் கடன் செலுத்தலுக்கான பொறுப்பு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.இலங்கை மத்திய வங்கி இந்த குற்றத்தின் சகல பணிகளையும் ஆரம்பித்து,முன்னெடுத்துச் சென்று,திறைசேரியின் கடன் தொடர்பான பொறுப்பை கையளித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசின் கடன் செலுத்தல் பணிகளை இலங்கை மத்திய வங்கியே முன்னெடுத்துள்ளது.சர்ச்சைக்குரிய சகல கடன் செலுத்தலையும் இலங்கை மத்திய வங்கியே முன்னெடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கத்துக்குரிய நிறுவனமல்லாத வகையில் செயற்படுகிறது.மத்திய வங்கியானது எவ்விதமான பொறுப்புமில்லாத சுயாதீன நிறுவனமாக செயற்படுவது அழிவின் பாதைக்கு நாட்டை கொண்டுச் செல்லும்.

நுpதியமைச்சின் நிதியமைச்சின் உள்ளக நிர்வாகம் பலவீனமாக இருப்பது அரசாங்க நிதி பற்றிய குழு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிதி ஒழுங்குவிதியின் 135 ஆவது பிரிவுக்கமைய நிதி அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை அறியாமல் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும செயற்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது.

நிதி பொறுப்பு ‘வழங்கல்| முன்னெடுப்பது பிரதான கணக்காய்வு அதிகாரியான நிதியமைச்சின் செயலாளரினாலாகும்.2.5 மில்லியன் டொலர் நிதியை தனி ஒரு பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளமை உள்ளக நிர்வாக பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.அரசியல் பகுப்பாய்வு

அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புசார் பொறுப்புக்களை கண்;காணித்தல் மற்றும் அறிக்கையிடல்’இந்த அறிக்கை ஊடாக வெட்கக்கேடான வகையில் மீறப்பட்டுள்ளது.

உண்மையான குற்றவாளியை மறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றியக் குழு உத்தியோகபூர்வ முத்திரையை வழங்கியுள்ளமை கவலைக்குரியது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net