← முகப்பு செய்திகள்

அமெரிக்கா – ஈரான் மோதலால் உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
அமெரிக்கா – ஈரான் மோதலால் உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.
சீனா பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா சென்றார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்கா – ஈரான் மோதலால் உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையையான ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உலக அளவில் எதிரொலித்து வருகிறது. ஈரானுக்கு முக்கிய பொருளாதார ஆதரவாளராக சீனா செயல்பட்டு வருகிறது. அதேவேளை, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியில் மோதல் நீடித்து வருகிறது.

இதனிடையே, 3 நாட்கள் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 13ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனா சென்ற டொனால்டு டிரம்ப் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர்களும் சீனா சென்றிருந்தனர். சீன தொழிலதிபர்களை அமெரிக்க தொழிலதிபர்கள் சந்தித்தனர். இந்த பயணத்தின்போது சீனா, அமெரிக்கா இடையே பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், 3 நாட்கள் சீன பயணத்தை நிறைவு செய்த டொனால்டு டிரம்ப் அமெரிக்கா சென்றடைந்தார். தனி விமானம் மூலம் சீனாவில் இருந்து புறப்பட்ட டிரம்ப் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் சென்றடைந்தார். மேலும், சீன அதிபருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக டிரம்ப் கூறினார்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 26 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 59 நிமிடங்கள் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net