← முகப்பு தலையங்கம்

அமெரிக்கா-ஈரான் இடையிலான இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 74 பார்வைகள்
அமெரிக்கா-ஈரான் இடையிலான இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந

அமெரிக்கா-ஈரான் இடையிலான இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்தம் ஏற்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் பின்னணியில், கடந்த வாரம் பாகிஸ்தான் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும், அந்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவின்றி நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மற்றும் முக்கியமான இறுதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு முன்பாக டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது, “ஈரானுக்கு நியாயமான ஒப்பந்தம் ஒன்றை முன்வைக்க உள்ளோம். அதை ஏற்க மறுத்தால், அந்நாட்டின் மின் நிலையங்களும் பாலங்களும் உட்பட முக்கிய கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கும். எனது பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தானில் நடைபெறும் இறுதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். அதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது” என கூறினார்.

இந்தக் கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம
06 Jun 2026
தலையங்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) இடைத்தேர்தலில், ஆளும் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்
39 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் (University of Surrey) வளாகத்தில்
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic), அதிநவீன ஏஐ
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் (Alps) பனிமலையில், கடந்த 1991 ஆம்
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்த
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net