Homeசெய்திகள்

மருதனார்மடம் சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டது போலித் துப்பாக்கியாம்! – நபர் கைது

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் சென்ற நபர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி எனக் கூறியுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் – நாமல் ராஜபக்ஷ!
அரசியல் தீர்வு குறித்து சுவிஸ் தலைமையில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தாமதமடைகிறது…
சுதந்திர தினமா? கரி நாளா? : மட்டு.நகரான்
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
பொலிஸாருக்கு இடையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் மற்றையவர் சிறையில்


யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் சென்ற நபர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி எனக் கூறியுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தையொன்றுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்கச் சென்றவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து, கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் சந்தைக்கு சென்று, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்துகொண்டே, “சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார்?” என கேட்டுள்ளார்.
அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
குறித்த நபர் கையிலிருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும், அவரது இடுப்புப் பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்ததாகவும் சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கெமரா பதிவுகளை சோதனையிட்டு, துப்பாக்கியுடன் சென்ற நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை கைது செய்துள்ளதுடன், அவர் சந்தைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
அதன்போது அது போலித் துப்பாக்கி என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.