Homeசெய்திகள்

திருமலை:பிணை இல்லையா?

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருக

மட்டக்களப்பில் பட்டி பட்டியாக உள்நுழைந்த யானைகள்
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
சூடுபிடித்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் – புதிய மாவட்டத் தலைவர்களுக்கு அவசர அழைப்பு


 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக, இன்று செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பிக்குமார் உட்பட 10 பேருக்கு எதிரான வழக்கு நாளை புதன்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் என்பவற்றில் இடம்பெறவுள்ளநிலையில் ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றை அமைத்து, அதில் புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 4 பிக்குகள் உட்பட 10 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது இடம்பெற்றிருந்த நிலையில் தொடர்ச்சியான பிணை மனுக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.