யோஷித மற்றம் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Homeசெய்திகள்

யோஷித மற்றம் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப

தொப்பிகல காட்டில் இருந்து மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்!! தாக்குதலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா?
திருகோணமலையில் மீனவர்களுக்கு விசேட முதலுதவி பயிற்சி
எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கை 180க்கும் மேற்பட்ட முறை குறிப்பு
உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை – இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தரப்புக்கள் பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முயற்சி ; சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் 19 ஆம் திகதி பேச்சுவார்த்தை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் இன்று விசாரணைக்கு வந்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஆக்ஸ்வால்ட் பெரேரா, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் விசாரணையைத் தாங்கும் அளவுக்கு மனரீதியாகத் தகுதியானவரா என்பது குறித்து கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி மூலம் கோரப்பட்ட நிபுணர் மருத்துவ அறிக்கை இன்னும் பெறப்படவில்லை
என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, தொடர்புடைய விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை விசாரிக்க வேறு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
 

COMMENTS