Homeசெய்திகள்

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பிரதான மத்திய நிலையம் திறப்பு

இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அதேவேளை புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதா

ஆபரேஷன் சிந்தூரின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கிறது பாகிஸ்தான்
இங்கிலாந்தில் அழிந்து வரும் சிவப்பு அணில்
களுத்துறையில் 23 விமான குண்டுகள் மீட்பு
மருதனார்மடம் சந்தையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை துப்பாக்கியுடன் தேடி வந்தவர் பச்சை மிளகாயை வாங்கி சென்றார்
உதவித் தொகை உயர்வு கோரி மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது


இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அதேவேளை புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான இலங்கையின் பிரதான மத்திய நிலையம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையம் வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) உள்ள தொற்றுநோய் சிகிச்சை கிளினிக் கட்டிடத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ளது.
அடையாளம் காணப்படும் நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக உடனடியாக நிபுணர் கிளினிக்குகளுக்கு பரிந்துரைக்கும் முறைமையும் இந்த வசதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மத்திய நிலையம், அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்து, வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
2 குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்!
குருணாகலை – பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10)  பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில்,  தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.