Homeசெய்திகள்

நீருக்குள் கசிப்பு ; மூவர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு  பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா மற்றும் கசிப்புடன்  மூன்று

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் விடயத்தில் மாற்று கோணத்தில் விசாரணைக்கு வலியுறுத்தல்
பொறியில் சிக்கி சிறுத்தை பலி
டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
ஊழலை ஒழிக்க மேலதிக செயற்பாடுகள் அவசியம்…
விவகாரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ஸ்ரீதர் வேம்புவின் மனைவி


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு  பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா மற்றும் கசிப்புடன்  மூன்று சந்தேக நபர்களை  மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய திங்கட்கிழமை (09)  மாலை ஆறு மணி முதல் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை ஆறு மணி வரை  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது  ஆரையம்பதியில் இருவர் மற்றும் மாவிலங்க துறையை சேர்ந்த ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  14 இலட்சம் மில்லி லீட்டர்  கோடா மற்றும் 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு , கோடா பரல்கள்,  கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் ஆகிய மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள்  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.