நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!

Homeசெய்திகள்

நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சி

ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்
அவசரகால சட்டம் பிக்குகளிற்கு இல்லை!
மருத்துவர்கள் கோத்தா விசுவாசிகளாக உள்ளனர்!
அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தம் – நளிந்த ஜயதிஸ்ஸ !
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் 22 மணி நேர நீர் வெட்டு


சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்திற்கு அமைய இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், பாலியல் உறவுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்தல், கொடுமைக்கு உட்படுத்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

COMMENTS