ட்ரம்பின் ஆதரவும், தகைச்சியின் அதிகாரமும்- ஆசியாவில் அமெரிக்க அரசியல் ?

Homeசெய்திகள்

ட்ரம்பின் ஆதரவும், தகைச்சியின் அதிகாரமும்- ஆசியாவில் அமெரிக்க அரசியல் ?

ஜப்பான் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற பிரதமர் சானே தகைச்சியின் ஆட்சியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான ஆதரவும், ஜப்பான்–அமெரிக

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் கைது
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17 தாக்கல்: சபாநாயகர் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தாது வழக்கை முடிவுக்கு கொண்டுவர முயற்சி!
யப்பானில் முதல் போக்கிமொன் தீம் பூங்கா திறந்து வைப்பு
பத்திரிகையாளர்கள் பணிநீக்க சர்ச்சை.. பதவியை ராஜினாமா செய்த வாஷிங்டன் போஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி


ஜப்பான் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற பிரதமர் சானே தகைச்சியின் ஆட்சியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான ஆதரவும், ஜப்பான்–அமெரிக்க உறவுகளில் புதிய மாற்றங்களை முன்னறிவிக்கின்றன.
பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உலக அரசியலில் இரு நாடுகளின் கூட்டணி இனி எந்த திசையில் நகரும் என்ற கேள்வி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த வாழ்த்துச் செய்திக்கு ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி நன்றி தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான X இல் வெளியிட்ட பதிவில், “ட்ரம்ப் தெரிவித்த அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த வசந்த காலத்தில் வெள்ளை மாளிகைக்குச் சென்று, ஜப்பான்–அமெரிக்க கூட்டணியை மேலும் வலுப்படுத்த எங்கள் கூட்டுப் பணிகளைத் தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தகைச்சி பதிவிட்டுள்ளார்.
மேலும், “எங்கள் கூட்டணியின் ஆற்றல் வரம்பற்றது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்ய நாங்கள் ஒன்றாக செயல்படுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தேர்தலுக்கு முன்பே ட்ரம்ப் தகைச்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவரது வெற்றிக்கும் வாழ்த்து கூறியிருந்தார். பொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் வெளிநாட்டு தேர்தல்களில் வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரிப்பது அரிதாக இருந்தாலும், ட்ரம்ப் இதற்கு முன்பும் இவ்வாறான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜப்பானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் சானே தகைச்சி தலைமையிலான கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தகைச்சியின் வெற்றியை பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடகத்தில் வாழ்த்து தெரிவித்தார்.  அடுத்த மாதம் தகைச்சியை வெள்ளை மாளிகையில் வரவேற்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இந்த வெற்றி, வரி குறைப்புகள், பாதுகாப்புச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் சீனாவை எதிர்கொள்ளும் கொள்கைகளை அமுல்படுத்தும் வழியை உருவாக்கியுள்ளது.
தகைச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார். அவரது லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP), பாராளுமன்றத்தின் கீழ்சபையில் உள்ள 465 இடங்களில் 316 இடங்களை வென்று, இதுவரை இல்லாத சிறந்த முடிவை பெற்றது.
கூட்டணிக் கட்சியான ஜப்பான் புதுமைக் கட்சி உடன் சேர்ந்து, தகைச்சியின் கூட்டணி மொத்தம் 352 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், மேல் சபையில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சட்டங்களை எளிதாக நிறைவேற்றும் அதிகாரம் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் “பொருளாதாரம், நிதி மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் மேற்கொண்ட மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொண்டதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்துகிறது” என சனே தகைச்சி கூறினார்.
64 வயதான தகைச்சி, கடந்த ஆண்டு இறுதியில் கட்சித் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு, தனக்கான மக்கள் ஆதரவை பயன்படுத்தி குளிர்காலத்தில் தேர்தலை அறிவித்தார்.
அவரது நேரடி பேச்சு, கடின உழைப்பாளர் என்ற உருவம் வாக்காளர்களை ஈர்த்துள்ளது. ஆனால், தேசியவாத சிந்தனைகள் மற்றும் பாதுகாப்பு மீதான அதிக கவனம், சீனாவுடன் உள்ள உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, வரி குறைப்புகள் நிதிச் சந்தைகளில் கவலையை உருவாக்கியுள்ளது.
தகைச்சி–ட்ரம்ப் கூட்டணி வலுப்பெறும் நிலையில், ஜப்பான்–அமெரிக்க உறவுகள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளில் மேலும் தீவிரமடையக்கூடும். அதேவேளை, சீனா உள்ளிட்ட பிராந்திய சக்திகளுடன் உறவுகளில் புதிய சமன்பாடுகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் காலங்களில் இந்த கூட்டணி ஆசிய–பசிபிக் அரசியலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே உலகம் கவனிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.
 

COMMENTS