சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில்  4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் !

Homeசெய்திகள்Design

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் !

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்திற்கு அமைய இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், பாலியல் உறவுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்தல், கொடுமைக்கு உட்படுத்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது – வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் !
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்
இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !
போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம் !
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு !

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்திற்கு அமைய இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், பாலியல் உறவுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்தல், கொடுமைக்கு உட்படுத்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.