Homeசெய்திகள்

சிறீதரன் சவால்:கோத்தா விசாரணைக்கு!

கடந்த காலங்களில் எட்டு முறை இலங்கை இராணுவத்தினரை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்

தெவ்னிமோரியை எடுத்துச் செல்ல இந்திய தூதுக்குழு வந்தது
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
கொக்கேய்ன் போதைப் பொருள்:உதயராசா கைது!
“உயரமான ஸ்வீடிஷ் பெண்ணுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..” எப்ஸ்டீனுடன் அனில் அம்பானி உரையாடல்?
யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!


கடந்த காலங்களில் எட்டு முறை இலங்கை இராணுவத்தினரை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, கட்சியால் எடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு சி.சிறீதரன் பதிலளித்துள்ளார்.இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு சிஐடி அழைத்துள்ளதாக தெரியவருகின்றது.கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு தொகுதியில் பல வீடுகளை பல நபர்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதை அங்கீகரிக்கும் கடிதங்கள் வழங்கியமை குறத்தே வாக்குமூலம் பெறவே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது அத்தகைய சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.