Homeசெய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க தயாராகிறது இலங்கை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் த

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.
கொஸ்கம விபத்தில் பலர் காயம்
பிரான்சிலிருந்து ஒன்றரை வருட நடை பயணம்: சீனாவை வந்தடைந்த பிரஞ்சுக்காரர்கள்!
பிரான்ஸ் இளைஞர்களுக்கான சமூக ஊடகத் தடை குறித்து விவாதிக்கிறது
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.  இதன்படி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது.
மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை போன்ற விடயங்கள் குறித்து இந்தக் குழு ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.