அடுத்த 25 ஆண்டுகளில், ஆபிரிக்காவின் மக்கள் தொகை 1 பில்லியன் மக்களால் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு ஆசியாவிலும் நிகழும், அத
75 ஆண்டுகளுக்குப் முன்பு ஆபிரிக்காவில் ஏறத்தாள 230 மில்லியன் மக்கள் இருந்தனர். ஆனால் அந்த மக்கள் தொகை படிப்படியாக வளர்ந்து ஆபிரிக்கா 2100 ஆம் ஆண்டுக்குள் 4 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. மனித வரலாற்றில் இதற்கு முன்பு இது போன்ற எதுவும் நடந்ததில்லை. அதே காலகட்டத்தில், சீனாவின் மக்கள் தொகை பாதிக்கும் மேல் சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனாவின் மக்கள் தொகையில் 2 மடங்கு மக்கள் தொகையை கொண்டதாக இருக்கும்.
2100 ஆம் ஆண்டு உலகம் மிகவும் வித்தியாசமாக இருக்கும், ஆபிரிக்காவும் ஆசியாவும் 8 பில்லியன் மக்களைக் கொண்டிருக்கும், மற்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து சிறுபான்மையினரை உருவாக்கும். உலகின் ஈர்ப்பு மையம் அமைதியாக ஆனால் தீர்க்கமாக மாறி வருகிறது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகின்றன. தென்கொரியா, யப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் அவ்வாறே உள்ளன. இது தொடர்பில் பல நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் உலகில் மாறிவரும் வாழ்க்கை முறைகள் அதில் கடும் தாக்கத்தை செலுத்துகின்றன.

COMMENTS