உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Homeசெய்திகள்

உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின

ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி தொழில்களைத் தடை செய்ய முடியாது – சஜித் பிரேமதாச
போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம் !
மதுவரித் திணைக்களத்தின் வருமான சேகரிப்பு, மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் செயன்முறை குறித்து கலந்துரையாடல்
கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!


அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின் சாரதியை, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், சோதனைக்காக நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவைப் புறக்கணித்து, தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
அதன்படி, பொலிஸார் லொறியை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்றனர். வாகனம் தொடர்ந்து பயணித்த நிலையில், பொலிஸார லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனையடுத்து மேற்கொண்ட சோதனையின் போது, லொறிக்குள் 10 கால்நடைகள் மற்றும் நான்கு எருமைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில், இரண்டு சந்தேக நபர்கள் 5,200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அக்குரெஸ்ஸ மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதியும் மற்றொரு சந்தேக நபரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் அவர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

COMMENTS