ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் உள்ள நிபந்தனை காரணமாக பெருமளவான இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை நீடித்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (08) விசேட அறிவிப்போன்றை விடுத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந..
ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் உள்ள நிபந்தனை காரணமாக பெருமளவான இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை நீடித்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (08) விசேட அறிவிப்போன்றை விடுத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை நீடித்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட வேண்டும். வர்த்தமானிகளை வெளியிடுவதற்கு முன்னர் அரச தொழில் கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது கருத்துக்களையும் கேட்டறியுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றார்.
