அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட தேரர்கள் திட்டம்

Homeசெய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட தேரர்கள் திட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் சில தலைவர்கள் மகா சங்கத்தினரை குறிவைத்து வெளியிடும் வெறுப்பு நிறைந்த அறிக்கைகள் மற்றும் அவமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்

கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!
நிழலாடும் சுதந்திரமும் நிலைகுலையாத போராட்டமும்  : விதுரன்
எப்ஸ்டீனுக்கு இரகசிய விடுமுறை இல்லத்தை பரிந்துரைத்த முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சன்
இங்கிலாந்தில் வீடற்ற அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
ஜப்பான் தேர்தல்: தகைச்சி பெரும்பாண்மை பெறுவார்: கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!


தற்போதைய அரசாங்கத்தின் சில தலைவர்கள் மகா சங்கத்தினரை குறிவைத்து வெளியிடும் வெறுப்பு நிறைந்த அறிக்கைகள் மற்றும் அவமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் 8000 பிக்குகளை கொழும்புக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பு அபயராமயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பௌத்தமும் பிக்குகளும் பல்வேறு துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் கூறினார். 74% மக்கள் பௌத்தர்களாக இருக்கும் ஒரு நாட்டில், பௌத்தர்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளனர் என்றும், ஆட்சியாளர்கள் பிக்குகள் வழங்கிய அறிவுரைகளையும், குறைந்தபட்சம் மகாநாயக்க தேரர் வழங்கிய அறிவுரைகளையும் கவனிக்காத நிலைக்கு வந்துவிட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக மகா சங்கத்தினர் பாரிய போராட்டத்தை அறிவிக்கத் தயாராக இருப்பதாகவும் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.

COMMENTS