Homeசெய்திகள்

அரசாங்கத்துக்கு ஆறு மாதம் காலவகாசம் வழங்குகிறோம்! முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்!

அரசாங்கம் நினைத்தால் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பிரேரணையை அடுத்தவாரமே பாராளுமன்றத்துக்கு கொண்டு வரலாம். அரசாங்கத்துக்கு ஆறு மாதம் காலவகாசம் வழங்குகி

கனடா அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க ட்ரம்ப் தடை
“உயரமான ஸ்வீடிஷ் பெண்ணுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..” எப்ஸ்டீனுடன் அனில் அம்பானி உரையாடல்?
பூனைக்கு சித்திரவதை : இளைஞனுக்கு விளக்கமறியல்
அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா
மருதனார்மடம் சந்தையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை துப்பாக்கியுடன் தேடி வந்தவர் பச்சை மிளகாயை வாங்கி சென்றார்


அரசாங்கம் நினைத்தால் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பிரேரணையை அடுத்தவாரமே பாராளுமன்றத்துக்கு கொண்டு வரலாம். அரசாங்கத்துக்கு ஆறு மாதம் காலவகாசம் வழங்குகிறோம். முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சவால்விடுத்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் இயலாமை மற்றும் பலவீனம் தொடர்ச்சியாக வெளிப்பட்ட வண்ணமே உள்ளது.
அரசாங்கம் பதவிக்கு வந்து ஒருவருட காலத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தோல்வியடைந்து விட்டது. அதேபோல் சகல கூட்டுறவு தேர்தல்களிலும் தோல்வியடைந்த நிலையில் உள்ளது. ஆகவே அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை வெறுப்பு மாத்திரமே மிகுதியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஆறுமாதம் காலவகாசம் வழங்குவோம். ஆளும் தரப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எதிர்வரும் வாரம் ஒரு பிரேரணையை கொண்டு வந்தால் மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தலாம்.
அரசாங்கத்தால் நாட்டை சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்க முடியாது. சிறந்த தரப்பினர் எம் அணியில் உள்ளார்கள். அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். நாட்டை சிறந்த முறையில் நாங்கள் நிர்வகிப்போம். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றிப்பெறும் என்றார்.
9 தேவைகள் தொடர்பான மதிப்பீட்டில் மலையக மக்களுக்கு முன்னுரிமையளிப்பது அவசியம்
தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வதுடன், இதன்போது பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் மலையக பகுதிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் பதுளை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு களநிலைவரங்களைப் பார்வையிட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
‘தித்வா’ சூறாவளி இலங்கையைத் தாக்கி இரண்டு மாதங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்நிலையில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்காக நான் பதுளை மாவட்டத்துக்கு வருகைதந்திருக்கிறேன். இக்காலப்பகுதியில் அரச அதிகாரிகள் ஆற்றிய அளப்பரிய சேவையையும், இலங்கை முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட உடன்நிற்பையும் நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். அதுமாத்திரமன்றி பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட தாக்கங்களை இழிவளவாக்குவதற்கு அவசியான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச சமூகமும் உடனடியாக முன்வந்தது.
எது எவ்வாறெனினும் இன்னமும் பல தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதிகள் அவசியமாகவுள்ளன. குறிப்பாக தங்குமிடங்கள், தூய்மையான குடிநீர், வாழ்வாதாரம் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் சார்ந்து நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்படவேண்டியுள்ளன.
அதேவேளை உயர் அபாய எச்சரிக்கைக்குரிய மற்றும் முறைசாராத பகுதிகளில் வசிப்போரை வேறு பகுதிகளுக்குக் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் கடப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். இது தற்போது எம்மத்தியில் நிலவும் சவால்களில் முக்கியமானதாகும். சேதமடைந்த மற்றும் அவசியமான காணிகள் தொடர்பான மதிப்பீட்டை விரைவுபடுத்துவதுடன், பாதிக்கப்பட்ட மக்களை இயலுமானவரை விரைவாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவேண்டும்.
அதேபோன்று இந்தப் பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் விரைந்து மேற்கொள்வதுடன், இதன்போது பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.