Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்ட விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்டார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தனது கல்வியங்காடு அலுவலகத்தில் வைத்து விந்தன் கனகரட்ணத்திற்கான கட்சி உறுப்புரிமையை வழங்கி வைத்தார். வடக்கு மாகாணசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ்…
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்றார். கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவரும்…
யாழில் கட்டுப்பணம் செலுத்திய தமிழரசு உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.
யாழில் போராட்டம் ஆதீரா Tuesday, March 11, 2025 யாழ்ப்பாணம் பயங்கரவாத தடைச் சட்டம் ( PTA) மற்றும் மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு (VAT) உள்ளிட்டவற்றை வாக்குறுதி அளித்தபடி அனுர அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுப் பாதையில் கையொப்பம் என்னும் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையம்…
கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு வருகை தருவோர் தமது முழுமையான விபரங்கள் தொடர்பான பிரதிகளை கொண்டுவருமாறு மாவட்ட செயலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளர் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் – யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் – யாழ்ப்பாணம்,…
நோய்களை குணப்படுத்துவதென்ற பேரில் இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஈழம் சிவசேனை அமைப்பின் புகாரையடுத்து குழுவினரை குடிவரவு குடியகல்வுத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் காவல்துறையால்; கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர்…
தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில் கிளிநொச்சியில் சி.சிறீதரன் தனது ஆதரவாளர்களை சுயேட்சையாக களமிறக்க…
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன் , பொலிஸ்நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை…
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன்…
யாழில். மயங்கி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெல்லியடி மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரான வடமராட்சி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தணிகைவேல் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். வதிரியில் உள்ள தனது வீட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்த நிலையில் , அவரை வீட்டார் பருத்தித்துறை…