Tag யாழ்ப்பாணம்

மீன்பிடி அமைச்சர் – கப்பலில் வேலையாம்!

கிளிநொச்சி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளில் புதிய கடலட்டை பண்ணைகள் வழங்கப்படுமென தெரிவித்து வாக்கு சேகரிப்பில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே துறைமுகங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி வடமராட்சியில் உள்ள  இளைஞர்களை உள்ளுராட்சி தேர்தலுக்காக  ஏமாற்றி வேலைவாங்கத் தொடங்கியுள்ளதாக மற்றொருபுறம் குற்றச்சாடடுக்கள் எழுந்துள்ளன. முன்னதாக அங்கயன் இராமநாதன் வேலை வாய்ப்பு வழங்கவதாக…

பகிடிவதைக்கு உள்ளான யாழ் . பல்கலை விஞ்ஞான பீட மாணவன் – காது கேட்கும் திறனும் இழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.  மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,  மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும்…

யாழில். 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வீதியில் சென்ற பாரவூர்தி ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.  வாகனத்தினுள்…

வடக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் 'டிஜிட்டல்' திரையில்

சகல சந்தைகளிலும் ஏனைய சந்தைகளின் முதல் நாள் மரக்கறிகளின் விலைகளை ‘டிஜிட்டல்’ திரை மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுத்தியுள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்  இடம்பெற்றது.  அதன் போது, உள்ளூராட்சிமன்றங்களுக்குச் சொந்தமான சந்தைகளில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு…

வீதி மின் விளக்குக்கு கட்டணம் அறவிட்டால் , மின் கம்பங்களுக்கு கட்டணம் அறவிடுவோம்

வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிட வேண்டியிருக்கும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.  அதன் போது, வீதி மின்விளக்குகள் பொருத்துவதில்…

யாழ்ப்பாண விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.   யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கா உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

நாலாவதாக சந்திரசேகரன் படையாம்??

இந்திய சினிமா பாணியிலான தேர்தல் பரப்புகைளில் ஜேவிபி களமிறங்கியுள்ளது.ஜேவிபியின் வளங்குறைந்த அமைச்சரான சந்திரசேகரன் மற்றும் அவரது அல்லக்கை இளங்குமரன் இருவரதும் கூத்துக்கள் நாள் தோறும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறிவருகின்றது. இந்நிலையில் வடக்கில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றப்போவதாக சொல்லிவரும் ஜேவிபியினர் இன்று யாழ்.பேரூந்து நிலையத்தில் கழுவி பெருக்கும் நடவடிக்கையில் குதித்தனர். ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச்சபை பணியாளர்கள் அங்கயன்…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பிமல் ரத்னாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் விமான நிலையத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும், அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் விமான நிலைய அதிகாரிகள், தொழினுட்பவியலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர் குறித்த அமைச்சர்…

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.  திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.  நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் , விமான நிலைய…

யாழில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து கஞ்சா கலந்த மாவா பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது  கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்…