Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இந்திய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிபோது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலோ 13வது திருத்தம் தொடர்பிலோ வாயே திறக்கவல்லையென தெரியவந்துள்ளது ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக மோடி, எக்ஸ்…
அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க…
இலங்கை அரசாங்கம் 11 இந்திய மீனவர்களை விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்தும். இலங்கை – இந்திய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காக கடலுக்கு சென்ற ஞானராஜ் மற்றும் பூலோகன் ஆகிய…
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட…
வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து, பாம்பினை காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் சர்மா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, இவரது வீட்டின் முற்றத்தில் காணப்பட்ட வலைகளுக்குள் நாக பாம்பு ஒன்று சிக்கி தவித்துக்கொண்டிருந்ததை அவதானித்து , வலைகளுக்குள் சிக்கி…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற தாதியரே உயிரிழந்தள்ளார். கடந்த 26ஆம் திகதி இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பழை வைத்தியசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை விளான் சந்தியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி…
நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்து கொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் வெளியேறியமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பல இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர்…
தையிட்டியில் விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை பற்றி தேர்தல் காலத்தில் பேசமுடியாதென இலங்கை நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை உபதேசங்கள் மூலமும் நல்லிணக்கம் மூலம் பெற திட்டமிட்டு தெற்கிலிருந்து தருவிக்கப்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் குழுக்கள் மூலம் பெற யாழில் தொடர் கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட விகாரை…